ஜார்கண்ட் பட்ஜெட் கூட்டத்தொடர்: ஹேமந்த் சோரனுக்கு அனுமதி மறுப்பு

ஜார்கண்ட் சட்டசபையில் இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி கோரி ஹேமந்த் சோரன் மனு தாக்கல் செய்திருந்தார்.;

Update:2024-02-23 02:37 IST

கோப்புப்படம் 

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரியாக இருந்து வந்த ஹேமந்த் சோரனை நிலமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கடந்த மாதம் 31-ந் தேதி கைது செய்தது. அதை தொடர்ந்து அவர் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

அமலாக்கத்துறையின் 13 நாள் காவல் முடிவடைந்ததை அடுத்து, கடந்த 15-ந் தேதி ஹேமந்த் சோரன், ராஞ்சியில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஜார்கண்ட் சட்டசபையில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தான் பங்கேற்க அனுமதி கோரி ஹேமந்த் சோரன் ராஞ்சி சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஹேமந்த் சோரன் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்க மறுத்த நீதிபதி அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்