கடல் அரிப்பை தடுக்க மத்திய அரசின் உதவி தேவை மந்திரி மங்கல் வைத்தியா பேட்டி

கடல் அரிப்பை தடுக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவி தேவை என்று மந்திரி மங்கல் வைத்தியா தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-03 18:45 GMT

மங்களூரு-

கடல் அரிப்பை தடுக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவி தேவை என்று மந்திரி மங்கல் வைத்தியா தெரிவித்துள்ளார்.

கடல் அரிப்பு

உடுப்பியில் உள்ள கோடி கன்னியா மீன்பிடி துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் மாநில மீனவர் நலன் மற்றும் துறைமுக துறை மந்திரி மங்கல் வைத்தியா வந்தார். அவர் துறைமுகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடல் அரிப்பை தடுக்க தற்காலிக நடவடிக்கைகளை மாநில அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. ஆனால், கர்நாடகத்தின் 320 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ள கடற்கரையோர பகுதிகளில் கடல் அரிப்பை நிரந்தரமாக தடுக்க மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது. மத்திய அரசின் உதவியுடன் கடல் அரிப்புக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.

மத்திய அரசு உதவி

பெங்கரே, கோடி கன்னியா, ஹங்கரகட்டே பகுதியை சேர்ந்த மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும். மீனவர்களின் பிரச்சினைகளை தடுக்க காங்கிரஸ் அரசால் மட்டுமே முடியும். துறைமுகங்கள், மீன்பிடி பிரச்சினைகளை தீர்க்க மாநில அரசின் மானியம் போதாது.

எனவே மத்திய அரசு மாநில அரசுக்கு உதவி செய்ய வேண்டும். கடற்கரை பகுதியில் வண்டல் மண்ணை அகற்ற மீன்வளத்துறை, துறைமுகத்துறைகளின் பங்களிப்புடன் கூட்டு திட்டம் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்