சபரிமலை பகுதியில் பலத்த மழை - நீரில் நனைந்த பக்தர்களின் காணிக்கை பணம்
பக்தர்களின் காணிக்கை பணத்தை கொண்டு செல்லும் கன்வேயர் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்,
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஆடி மாத பூஜைக்காக கடந்த 17-ந்தேதி திறக்கப்பட்ட நிலையில், நேற்று காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சபரிமலை பகுதியில் பலத்த மழை பெய்து கொட்டித் தீர்த்தது.
மழை காரணமாக பக்தர்களின் காணிக்கை பணத்தை கொண்டு செல்லும் கன்வேயர் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தில் ஏராளமானவை தண்ணீரில் நனைந்ததாக தெரிகிறது. அதே நேரம் நனைந்த பணத்தை உலர வைக்கும் பணியும், தேங்கி நிற்கும் மழை நீரை மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.