'நீட்' தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட தமிழக அரசின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

Update: 2023-01-02 20:20 GMT

புதுடெல்லி,

மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

கடந்த அக்டோபர் 13-ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக சட்டசபையின் நீட் தேர்வு ரத்து சட்ட மசோதா கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அது ஜனாதிபதியின் தீவிர பரிசீலனையில் இருப்பதை சுட்டிக்காட்டி ரிட் மனு மீதான விசாரணையை 12 வாரங்களுக்கு தள்ளி வைக்குமாறு தமிழகத்தின் சார்பில் வக்கீல் அரிஸ்டாட்டில் ஜோசப் கோரிக்கை கடிதம் அளித்தார். இதை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, தமிழக அரசின் ரிட் மனு மீதான விசாரணையை 12 வாரங்களுக்கு தள்ளி வைத்திருந்தது. இதற்கிடையே இந்த மனுவை நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்