கடன் தொல்லையால் தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை
என்.ஆர்.புரா தாலுகாவில் கடன் தொல்லையால் தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா மாகுந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 35). இவர் அதே பகுதியில் விவசாய பொருட்கள், மோட்டார்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். மேலும் இவருக்கு சொந்தமாக காபி தோட்டம் உள்ளது.
இந்த நிலையில் பிரகாஷ், அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரிடம் ரூ.7 லட்சம் கடன் வாங்கினார். ஆனால் அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. மேலும் அவரிடம் பணத்தை திருப்பிக் கேட்டு சந்தோஷ் நெருக்கடி கொடுத்து வந்தார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான பிரகாஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
பின்னர் கடிதம் ஒன்றை எழுதிவைத்து விட்டு வீட்டின் அருகில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுபற்றி அறிந்த பாலேஹொன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னா் போலீசார் பிரகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்தோசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.