ஞானவாபி மசூதி வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 8 வாரங்கள் அவகாசம் கோரி தொல்லியல்துறை மனு

மேலும் 8 வாரங்கள் அவகாசம் கோரி தொல்லியல்துறை சார்பில் வாரணாசி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2023-09-03 19:23 GMT

அலகாபாத்,

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. அந்த மசூதி, கோவிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த வாரணாசி கோர்ட்டு, அந்தப் பகுதியில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தொல்லியல்துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும் மசூதியில் சிவலிங்கம் இருப்பதாகக் கூறப்பட்ட பகுதியை 'பாதுகாக்கப்பட்ட பகுதி' என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளதால், அந்த பகுதியைத் தவிர்த்துவிட்டு மற்ற பகுதிகளில் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 4-ந்தேதி ஆய்வுப் பணிகள் தொடங்கின. இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 2-ந்தேதியுடன் முடிவடைந்தது. இருப்பினும் ஆய்வுப் பணிகள் முழுவதுமாக முடியாததால், மேலும் 8 வாரங்கள் அவகாசம் கோரி தொல்லியல்துறை சார்பில் வாரணாசி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 8-ந்தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்