குஜராத்- லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து : 6 பேர் உயிரிழப்பு- 15 பேர் படுகாயம்
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வதோதராவின் எஸ்எஸ்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
குஜராத்,
குஜராத்தில் ,வதோதராவின் கபுராய் பாலம் தேசிய நெடுஞ்சாலையில் டிரெய்லர் லாரி மீது எதிர்பாராதவிதமாக சொகுசு பஸ் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது .இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்,மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டுசிகிச்சைக்காக வதோதராவின் எஸ்எஸ்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.