மேற்கு வங்க சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட மசோதாக்களை கவர்னர் நிறுத்தி வைத்துள்ளார் - மம்தா பானர்ஜி ஆவேசம்

மேற்கு வங்க கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன் என மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-09-05 10:15 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்க கவர்னருக்கும், மாநில அரசுக்கும் இடையே தொடர்ந்து பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அந்த மாநிலத்தின் கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

பள்ளிகள், கல்லூரிகள் நடத்துவது போன்ற விவகாரங்களிலும் கவர்னர் தலையிடுவதாக தெரிவித்த அவர், மேற்கு வங்க சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட மசோதாக்களை கவர்னர் நிறுத்தி வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளில் கவர்னர் தொடர்ந்து தலையிட்டால் நிதியை தடுத்து நிறுத்துவோம் என்று மம்தா பானர்ஜி கூறினார்.

கவர்னரின் இத்தகைய செயல்கள் மாநில அரசின் நிர்வாகத்தை முடக்கும் முயற்சி என்று விமர்சித்த மம்தா பானர்ஜி, இது போன்ற செயல்பாடுகள் தொடரும் பட்சத்தில் மேற்கு வங்க கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்