புதுவையில் அரசு பள்ளிகள் தொடங்கும் நேரம் மாற்றம்

காலை 9 மணிக்கு பதிலாக 9.15 மணிக்குத் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Update: 2024-08-03 06:24 GMT

புதுவை,

புதுவையில் அரசு பள்ளிகள் தொடங்கும் நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 7 முதல் அரசுப் பள்ளிகள் காலை 9 மணிக்கு பதிலாக 9.15 மணிக்குத் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

புதிய அட்டவணைப்படி காலை 9.15 - 9.30 வரை வழிபாடு, 9.30 - மதியம் 12.25 வரை 3 பாடவேளைகள் நடக்கும். காலை 11- 11.10 வரை இடைவேளை, மதியம் 12.40- 1.30 வரை மதிய உணவு இடைவேளை விடப்படும். மதியம் 1.30- மாலை 4.20 வரை 4 பாடவேளைகள், மதியம் 2.50- மாலை 3 வரை இடைவேளை விடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்