உலகளாவிய பட்டினி குறியீடு; இந்தியா 111-வது இடம்

உலகளாவிய பட்டினி குறியீட்டு எண் பட்டியலில் இந்தியா 28.7 புள்ளிகள் பெற்று 111-வது இடத்தில் உள்ளது.;

Update: 2023-10-13 00:24 GMT

புதுடெல்லி,

ஒவ்வொரு நாட்டிலும் பட்டினி அளவு எந்த அளவில் இருக்கிறது என்பதை கண்டறிந்து, உலகளாவிய பட்டினி குறியீட்டு எண் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், 125 நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டு நேற்று பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில், உலகளாவிய பட்டினி குறியீட்டு எண்ணில் இந்தியா 28.7 புள்ளிகள் பெற்றுள்ளது. இது, பட்டினி அளவு தீவிரமாக இருக்கிறது என்பதை குறிக்கிறது. 125 நாடுகள் பட்டியலில் இந்தியா 111-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு, இந்தியா 107-வது இடத்தில் இருந்தது.

அதே சமயத்தில், அண்டை நாடுகளான பாகிஸ்தான் (102-வது இடம்), வங்காளதேசம் (81), நேபாளம் (69), இலங்கை (60) ஆகிய நாடுகள் இந்தியாவை விட சிறப்பான இடத்தை பெற்றுள்ளன.

அதுபோல், குழந்தைகள் தங்கள் உயரத்துக்கேற்ற எடையில் இருக்கிறதா என்பதை கணக்கிட்டதில், இந்தியாவில் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்