உத்தர பிரதேசத்தில் பிரபல தாதா சுட்டுக்கொலை
உத்தர பிரதேசத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பிரபல தாதா, சிறப்பு அதிரடிப் படையினரால், 'என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டார்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 5 கொலை மற்றும் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பிரபல தாதா கபில், (வயது33) என்பவரை போலீசார் பல ஆண்டுகளாக தேடி வந்தனர்.
இந்நிலையில், இவர் நொய்டாவில் உள்ள பிஸ்ராக் பகுதியில் பதுங்கியிருப்பதை அறிந்த போலீசார் சிறப்பு அதிரடிப் படையினர் உதவியுடன் நேற்று முன்தினம் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது கபில் போலீசாரை நோக்கி சுட்டார். பதிலடி தாக்குதல் நடத்திய அதிரடி படையினர், கபிலை சுட்டுக் கொன்றனர்.
பிரபல தாதாக்களான விகாஸ், சுனில் ரத்தி குழுவில் இடம்பெற்றிருந்த கபில் மீது புதுடெல்லி, குருகிராம் உட்பட பல்வேறு நகரங்களில், 5 கொலை மற்றும் பல்வேறு கொள்ளை வழக்குகள் பதிவாகியிருந்தன.