மைனர் பெண் கூட்டு கற்பழிப்பு; வாலிபர் கைது
‘பெங்களூரு பேடராயணபுராவில் மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு:
பெங்களூரு பேடராயனபுரா பகுதியில் 17 வயது மைனர் பெண் வசித்து வருகிறார். இந்த மைனர் பெண்ணுக்கும், ஒரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருந்தது. அந்த வாலிபர், மைனர் பெண்ணை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் அதற்கு மைனர் பெண் மறுத்தார். இதனால் மைனர் பெண்ணை மிரட்டி வாலிபர் ஆபாச புகைப்படம், வீடியோ எடுத்ததாக தெரிகிறது.
மேலும் அந்த வீடியோவை காட்டி மைனர் பெண்ணை வாலிபரும், அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து கடந்த ஒரு மாதமாக அடிக்கடி கூட்டாக கற்பழித்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து மைனர் பெண் அளித்த புகாரின்பேரில் பேடராயனபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். அவரது நண்பர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.