தங்கவயல் தொகுதியில் பா.ஜனதா சார்பில் யார் போட்டியிட்டாலும் முழு ஆதரவு

வரும் சட்டசபை தேர்தலில் தங்கவயல் தொகுதியில் பா.ஜனதா சார்பில் யார் போட்டியிட்டாலும் முழு ஆதரவு என்று மோகன் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-20 18:45 GMT

கோலார் தங்கவயல்:

கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை ஜார்ஜ் மன்னர் அரங்கில் பா.ஜனதா கட்சியின் சார்பில் தாலுகா அளவிலான தொண்டர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் தாலுகா தலைவர் கமலநாதன் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் நாராயணன், மாவட்ட துணைத் தலைவர் விஜயகுமார், மாவட்ட துணை செயலாளர் கம்பளி பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கோலார் தங்கவயல் புறநகர் பகுதி பா.ஜனதா கட்சி தலைவரான மோகன் கிருஷ்ணா பேசுகையில் கூறியதாவது:-

வரும் சட்டசபை தொகுதி பொதுத்தேர்தலில் பா.ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யாராக இருந்தாலும் அவர்கள் வெற்றி பெற எனது முழு ஒத்துழைப்பையும் அளிப்பேன். பா.ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார்.

அவரை தொடர்ந்து தங்கவயல் டவுன் பா.ஜனதா தலைவர் கமலநாதன் பேசுகையில் கூறியதாவது:- பெங்களூருவை உருவாக்கிய கெம்பேகவுடாவின் ரத ஊர்வலத்தை பா.ஜனதா கட்சி பெங்களூருவில் தொடங்க உள்ளது. அந்த யாத்திரையை கோலார் தங்கவயல் வரும்போது கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் சேர்ந்து சிறப்பான முறையில் வரவேற்க வேண்டும். கட்சியின் மேலிடம் யாருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தாலும் அவர்களை நாம் ஒற்றுமையுடன் இருந்து வெற்றி பெற செய்யவேண்டியது அனைவரின் கடமை என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்