முழு அடைப்பு அறிவிப்பு: திருப்பதியில் 144 தடை உத்தரவு அமல்

திருப்பதியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2022-06-20 01:41 IST
முழு அடைப்பு அறிவிப்பு: திருப்பதியில் 144 தடை உத்தரவு அமல்

திருப்பதி,

திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரமேஷ்வர்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதையொட்டி திருப்பதியில் உள்ள பஸ், ரெயில் நிலைய பகுதியில் போராட்டம் நடத்த அனுமதியில்லை. அந்தப் பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். மேலும் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த அனுமதியில்லை. பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும். எனினும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரலாம். பக்தர்களுக்கு எந்த இடையூறும் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்