அரசு வேலை கிடைக்கவில்லை; 'வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்' வைத்து யமுனை ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை
அரசு வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் யமுனை ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரின் நக்லா தல்ஃபி பகுதியை சேர்ந்த் இளைஞர் கர்மவீர் சிங். இவர் கடந்த சில ஆண்டுகளாக அரசு வேலைக்கு முயற்சித்துள்ளார். அதேபோல், இந்திய ராணுவத்தில் சேர்வதற்கும் முயற்சித்துள்ளார். ஆனால், அவருக்கு வேலை கிடைக்கவில்லை.
இந்நிலையில், தனக்கு வேலை கிடைக்காததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த கர்மவீர் சிங் நேற்று யமுனை ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். ஆற்றில் குதிப்பதற்கு முன் அரசு வேலைகிடைக்காததால் தற்கொலை செய்துகொள்கிறேன் என்று தனது வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
இதை பார்த்த உறவினர்கள், நண்பர்கள் கர்மவீரை தேடியுள்ளனர் இது குறித்து போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, தேடுதலை தொடங்கிய போலீசார் ஆக்ராவில் யமுனை ஆற்றின் கரையில் கர்மவீரின் செருப்பு மற்றும் செல்போனை கண்டுபிடித்தனர். அவர் ஆற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவித்த போலீசார் கர்மவீரின் உடலை தேடி வருகின்றனர்.