பதேபூர் சிக்ரி வளாகத்தில் பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணி தவறி விழுந்து உயிரிழப்பு

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி பதேபூர் சிக்ரி வளாகத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

Update: 2023-09-21 23:17 GMT

ஆக்ரா,

முகலாய மன்னர் அக்பரால் கட்டப்பட்ட பதேபூர் சிக்ரி கோட்டை, ஆக்ராவின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

அந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் இருந்து 30 பேர் அடங்கிய குழுவினர் பதேபூர் சிக்ரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்களுடன் வந்த 60 வயதான பெண் ஒருவர், அங்கிருந்த 5 அடி உயர நடைமேடையில் இருந்து தவறி விழுந்துள்ளார். கல் தரையின் மீது விழுந்ததால், அவரது தலையில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சுற்றுலா பயணி தவறி விழுந்த சமயத்தில், அங்கு மருத்துவ உதவி வந்து சேர்வதற்கு தாமதமானதாக அங்கிருந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஆக்ரா மாவட்ட மாஜிஸ்திரேட் பானு சந்திரா உத்தவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்