சோலார் பேனல்கள் அனுப்பி வைப்பதாக கூறி விவசாயியிடம் ரூ.2¾ லட்சம் மோசடி

சிக்கமகளூருவில் சோலார் பேனல்கள் அனுப்பி வைப்பதாக கூறி விவசாயியிடம் ரூ.2¾ லட்சம் மோசடி செய்துள்ளனர்.

Update: 2022-07-31 15:09 GMT

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு டவுன் அருகே சார்கோடு கிராமத்தை சேர்ந்தவர் சச்சின். விவசாயி. இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் காபி தோட்டம் உள்ளது. இந்த நிலையில் சச்சின் காபி தோட்டத்திற்கு தேவையான விவசாய பொருட்கள் மற்றும் சோலார் பேனல்களை வாங்க முடிவு செய்தார்.

அதற்காக அவர் பிரதமர் விவசாய நலத்திட்டத்தின் கீழ் ஆன்லைனின் சோலார் பேனல்கள் வாங்க பதிவு செய்து இருந்தார். இந்த நிலையில் சச்சினை தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், சோலார் பேனல் தயாராக உள்ளதாகவும், அதனை அனுப்பி வைப்பதற்கு ரூ.2¾ லட்சம் ஆகும் என கூறியுள்ளார்.

அதை உண்மை என நம்பிய சச்சின், மர்மநபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.2¾ லட்சத்தை பல்வேறு தவணைகளாக அனுப்பி வைத்தார்.பின்னர், மர்மநபரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் மர்மநபர் சோலார் பேனல் அனுப்பி வைப்பதாக கூறி பணமோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து சச்சின் உடனே இதுகுறித்து சிக்கமகளூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்