முதியவரின் நிலத்தை விற்று மோசடி; வங்கி ஊழியர் உள்பட 2 பேர் கைது

முதியவரின் நிலத்தை விற்று மோசடி நடந்துள்ளது. வங்கி ஊழியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-24 21:51 GMT

பெங்களூரு: பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணா ரெட்டி (வயது 76). இவருக்கும் வங்கி ஒன்றில் பணியாற்றி வரும் கிருஷ்ணா ரெட்டி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணா ரெட்டி தனது நிலத்தின் பத்திரத்தை வங்கியில் வேலை செய்யும் கிருஷ்ணா ரெட்டியிடம் கொடுத்து இருந்தார். இந்த நிலையில் வங்கி ஊழியர் கிருஷ்ணா ரெட்டியும், அவரது நண்பரான நாகராஜ் என்பவரும் சேர்ந்து அந்த நிலத்திற்கு போலி ஆவணங்கள் தயாரித்து திலீப் என்பவரிடம் விற்றதாக தெரிகிறது. பின்னர் அந்த நிலத்தை திலீப், இளங்கோ என்பவருக்கு விற்று உள்ளார்.

இந்த நிலையில் நிலத்தின் பத்திரத்தை வைத்து இளங்கோ வங்கி ஒன்றில் கடன் பெற முயன்றார். அப்போது பத்திரத்தில் சில குளறுபடிகள் இருந்ததை வங்கி ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து இளங்கோ அசோக்நகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்த போது வங்கி ஊழியர் கிருஷ்ணா ரெட்டியும், நாகராஜூம் முதியவரான கிருஷ்ணா ரெட்டியின் நிலத்தை விற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் கிருஷ்ணா ரெட்டி, நாகராஜை எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்