பீகார் முதல்-மந்திரிக்கு எதிராக சர்ச்சை கருத்து கூறிய முன்னாள் எம்.பி.க்கு 3 ஆண்டு சிறை

முன்னாள் எம்.பி. அருண்குமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

Update: 2022-07-31 22:02 GMT

பாட்னா,

பீகார் மாநிலம் ஜெகனாபாத் தொகுதி ராஷ்டிரீய லோக் சம்தா கட்சி முன்னாள் எம்.பி. அருண்குமார். இவர், பூமிகார் சமூகத்தினர் குறிவைத்து தாக்கப்படுவதாக குற்றம் சாட்டி, 'நாங்கள் ஒன்றும் வளையல் அணிந்து கொண்டிருக்கவில்லை. எங்கள் மரியாதையைக் குலைத்த முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் நெஞ்சைப் பிளப்போம்' என்று கடந்த 2015-ம் ஆண்டு சர்ச்சை கருத்து கூறியிருந்தார்.

இதுதொடர்பாக அருண்குமார் மீது ஐக்கிய ஜனதா தள தலைவர் சந்திரிகா பிரசாத் யாதவ் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்புக் கூறிய சிறப்பு கோர்ட்டு நீதிபதி, முன்னாள் எம்.பி. அருண்குமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதே வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு முன்னாள் எம்.பி.யான பப்பு யாதவ் போதிய சாட்சியம் இல்லை என்று கூறி விடுவிக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்