டெல்லி அருகே பயங்கர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

டெல்லி அருகே வேன் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-10-22 23:51 GMT

கோப்புப்படம் 

புதுடெல்லி,

தெற்கு டெல்லியில் உள்ள மதன்பூர் காதர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் வேன் ஒன்றில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பலமு மாவட்டத்திற்கு சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் சென்ற வேன் கிரேட்டர் நொய்டாவில் உள்ள யமுனா விரைவுச் சாலையில் சென்று கொண்டு இருந்தபோது வேன் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது.

விபத்தில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது இதில் வேனில் இருந்த சிறுமி உள்பட 5 பேர் அதே இடத்தில் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருகிறார்கள்.

விபத்தில் பலியானவர்கள் உபேந்திர பைதா (வயது 38), அவரது சகோதரர் பிஜேந்திர பைதா (வயது 36), பிஜேந்திராவின் மனைவி காந்தி தேவி (வயது 30), அவர்களின் மகள் குவ் (வயது 12) மற்றும் சுரேஷ் பைதா (வயது 45) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். உபேந்திராவின் மகன் சூரஜ் (16), பிஜேந்திராவின் மகன்கள் ஆயுஷ் (வயது 8), ஆர்யன் (வயது 10) ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்