இந்தியாவில் முதல் முறையாக டெல்லியில் நோயாளிகளுக்கு தேவையான ரத்தம் டிரோன் மூலம் இடமாற்றம்

சோதனை அடிப்படையில் 10 யூனிட் ரத்தம் டிரோன் மூலம் வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டது.;

Update: 2023-05-10 16:36 GMT

புதுடெல்லி,

கொரோனா காலத்தில் நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை வழங்க முதல் முறையாக டிரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இதனை தொடர்ந்து பல்வேறு மருத்துவ பயன்பாடுகளுக்கு டிரோன்களை உபயோகிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வந்தது.

அந்த வகையில் புதிய முயற்சியாக இன்று டெல்லியில் உள்ள கிம்ஸ் மருத்துவ அறிவியல் மையத்தில் இருந்து லேடி ஹார்டினேஜ் மருத்துவ கல்லூரிக்கு 10 யூனிட் ரத்தம் டிரோன் மூலம் கொண்டு செல்லப்பட்டது. சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி வெற்றி பெற்றதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்