வர்த்தக நோக்கத்திற்கான இறுதி மையம் இந்தியா: மத்திய நிதி மந்திரி; பொது துறை விற்பனை குற்றச்சாட்டுக்கும் மறுப்பு

ஒரு வளர்ச்சிக்கான பொருளாதாரம் கொண்ட, சரியான காரணிகள் ஒன்றிணைந்த நாடாக இந்தியா உள்ளது என மத்திய நிதி மந்திரி கூறியுள்ளார்.

Update: 2023-03-05 07:00 GMT



புதுடெல்லி,


புதுடெல்லியில் நடைபெற்ற வருடாந்திர ரைசினா பேச்சுவார்த்தை கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பொது சொத்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை நிராகரித்து பேசினார்.

இந்தியாவில் தனியார் துறையின் செயல்பாட்டில் இல்லாத துறைகள் என்று எந்தவொரு துறையும் கிடையாது என அவர் குறிப்பிட்டார். பொது துறை கொள்கை என்பது வேடிக்கையான ஒன்று அல்ல. அரசு எல்லாவற்றையும் விற்று கொண்டிருக்கவில்லை.

அதன் பொருளை எதிர்க்கட்சியினர் முழு அளவில் புரிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், நாங்கள் விற்று கொண்டிருக்கிறோம் என கூறி கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவற்றை விற்கவில்லை என்று அவர் பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர், இந்தியாவின் நீடித்த வளர்ச்சிக்கான காரணங்களாக, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட இளஞ்சமூகம், நடுத்தர வர்க்கத்தினரும் விநியோகிப்பவர்களாக மாறியிருப்பது, தொழில் நுட்பம் சார்ந்த முதலீடு மற்றும் பொதுமக்களுக்கான உட்கட்டமைப்பு ஆகியன உள்ளன. டிஜிட்டல் உட்கட்டமைப்பும் இருக்கிறது என கூறினார்.

ஜி-20 மாநாட்டில் உலகளாவிய தெற்கு பிராந்தியங்களின் குரலை இந்தியா முன்வைத்து கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த ஜி-20 மாநாட்டில் பேச கூடிய பல்வேறு மந்திரிகளும், அரசியல் மற்றும் பொருளாதார கூட்டணி காரணிகளால் ஆபத்து ஏற்படாத வகையில், பல்வேறு நாடுகளுக்கும் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன என பாராட்டு தெரிவித்து உள்ளனர். வர்த்தகத்திற்கான இறுதி மையம் ஆக இந்தியா தற்போது உள்ளது.

கொரோனா பெருந்தொற்றை அரசு எதிர்கொண்ட விதம் மற்றும் நாட்டுக்கு தேவையான நீடித்த வளர்ச்சி ஆகியவை உண்மையில் நன்றாக செயல்பட்டு உள்ளன என்றும் அவர் பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்