பெண் எம்.எல்.ஏ. பங்களா வீட்டின் பூட்டை உடைத்து பழங்கள், பருப்புகளை திருடி சென்ற கும்பல்

மத்திய பிரதேசத்தில் பெண் எம்.எல்.ஏ. பங்களா வீட்டின் பூட்டை உடைத்து சமையல் அறையில் இருந்த பழங்கள், பருப்புகளை கும்பல் ஒன்று திருடி சென்றுள்ளது.

Update: 2022-08-10 08:06 GMT

போபால்,



மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் அரசு பங்களா ஒன்று உள்ளது. இந்த பங்களா வீடு, தமோ பதாரியா சட்டசபை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. ராம்பாய் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.

கடந்த ஒரு மாதத்திற்கும் கூடுதலாக அவர் பங்களா வீட்டை பூட்டி விட்டு, வெளியூருக்கு சென்று விட்டார். இதனால், பங்களா ஆள்வரத்து இன்றி காணப்பட்டது. ஒரு மாதத்திற்கு பின்னர் திரும்பிய ராம்பாய்க்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

அந்த பங்களாவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்ததில், சமையலறை கதவை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள், முந்திரி, பாதாம் பருப்புகள், தானியங்கள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட மளிகை பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுதவிர, பங்களாவில் இருந்து விளக்குகளும் கொள்ளை போயுள்ளன. இதுபற்றி சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று டி.டி. நகர் காவல் நிலைய உயரதிகாரி செயின் சிங் ரகுவன்ஷி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்