வினாத்தாள் கசிந்த விவகாரம்: மின்துறை இளநிலை உதவியாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட தந்தை-மகன் கைது

மின்துறை இளநிலை உதவியாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.;

Update:2022-08-22 03:01 IST

கதக்: கர்நாடக மின் துறையில் இளநிலை உதவியாளர் பதவிக்கான தேர்வு கடந்த 7-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்காக கதக் மாவட்டத்திலும் மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் கதக் மாவட்டத்தில் முனிசிபால் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் இருந்து வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் பெலகாவி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட கல்லூரி துணை முதல்வரான மாருதி சொனவனா மற்றும் அவரது மகன் சமீதா குமார் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் வினாத்தாளை செல்போனில் புகைப்படம் எடுத்து வெளியிட்டு முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் கல்கர்னியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடகத்தில் எஸ்.ஐ. தேர்வில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது மற்றொரு அரசு தேர்வில் முறைகேடு நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்