ராஜ்யசபை எம்.பி.யாக திரிபுரா முன்னாள் முதல்-மந்திரி தேர்வு

திரிபுரா முன்னாள் முதல்-மந்திரி பிப்லப் குமார் தேப் நாடாளுமன்ற மேலவை எம்.பி.யாக இன்று தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2022-09-22 15:06 GMT


அகர்தலா,


திரிபுராவின் முன்னாள் முதல்-மந்திரியாக இருந்தவர் பிப்லப் குமார் தேப். இவர் திரிபுரா மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மேலவை (ராஜ்யசபை) எம்.பி.க்கான தேர்தலில் போட்டியிடுவார் என பா.ஜ.க. சார்பில் அறிவிப்பு வெளியானது. இதன்படி, அவர் கடந்த 12-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணிக் சஹா பதவி விலகியதும் காலியான தொகுதியில் தேப் போட்டியிட்டார். அடுத்த ஆண்டு திரிபுராவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில் சஹா, திரிபுரா முதல்-மந்திரியாகி உள்ளார்.

இதனை முன்னிட்டு காலியாக இருந்த ராஜ்யசபை எம்.பி. தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. சட்டசபையில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை உள்ள சூழலில், தேப் வெற்றி பெறுவது உறுதியாகி இருந்தது.

இந்நிலையில், இன்று நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 58 வாக்குகளில் 43 வாக்குகள் பெற்று தேப் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது. இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நாடாளுமன்ற மேலவை எம்.பி.யாக என்னை தேர்ந்தெடுத்ததற்காக திரிபுராவை சேர்ந்த பா.ஜ.க. மற்றும் ஐ.பி.எப்.டி. கட்சியின் எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி என்று தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்