நுபுர் ஷர்மா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு டெல்லி போலீஸ் பாதுகாப்பு

நுபுர் சர்மா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு டெல்லி போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.

Update: 2022-06-07 07:16 GMT

புதுடெல்லி

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா டிவி விவாதம் ஒன்றில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசியதாக மராட்டிய காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அதேபோல் நவீன் ஜிந்தால் தனது டுவிட்டர் பதிவில் நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்டிருந்தார். இதற்கு சர்வதேச அளவில் சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிந்தால் ஆகிய இருவரை நீக்கம் செய்து பாஜக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கிடையே அவர் மீது மும்பை உள்பட பல இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் இதுதொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே கூறும் போது

பைதோனி போலீஸ் நிலையத்தில் நுபுர் சர்மாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே சட்டத்தின்படி வாக்குமூலத்தை பதிவு செய்ய விசாரணைக்காக அவரை அழைப்போம். சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும். என்று கூறினார்.

இந்த நிலையில் நுபுர் சர்மா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதாக டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

நுபுர் சர்மா தனக்கு மிரட்டல்கள் வருவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் கூறியதை அடுத்து, சர்மா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது" என்று ஒரு அதிகாரி கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்