அனைவரும் வரவேற்கிறார்கள், அரசு தடுக்கிறது - மணிப்பூரில் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து ராகுல் காந்தி டுவீட்

ஆனால் அரசு என்னை தடுத்து நிறுத்துவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

Update: 2023-06-29 14:31 GMT

இம்பால்,

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த மாதம் 3-ந்தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இந்த வன்முறைக்கு பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்பது காங்கிரசின் விமர்சனமாகும்.

இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக இன்று மணிப்பூர் சென்றார். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். ராகுல்காந்தி வருகையால் வன்முறை ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக தடுத்து நிறுத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் காவல்துறை தடுத்து நிறுத்தியதை அடுத்து இம்பால் திரும்பினார் ராகுல்காந்தி.

இந்த நிலையில் இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

சகோதர , சகோதரிகளின் நிலை குறித்து கேட்டறிய மணிப்பூர் வந்தேன். அனைவரும் என்னை அன்புடன் வரவேற்கிறார்கள் . ஆனால் அரசு என்னை தடுத்து நிறுத்துவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்