டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உடன் மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சந்திப்பு

மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர்.

Update: 2022-07-09 08:53 GMT

புதுடெல்லி,

மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தனர்.

அவர்கள் இருவரும் பிரதமர் நரேந்திர மோடியையும் இன்றைய தினம் சந்திக்க வாய்ப்புள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பாஜக தலைவர் ஜேபி நட்டாவையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.


முன்னதாக, ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை நேற்று சந்தித்து, மராட்டியத்தில் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கம் மற்றும் பல விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.

மராட்டியத்தில் புதிய அரசாங்கத்தின் முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிசும் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிலையில், மீதமுள்ள மந்திரிகள் விரைவில் பதவியேற்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்