ராஜஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் மக்கள் அச்சம்

ராஜஸ்தானின் பைக்னர் மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.

Update: 2023-03-26 01:33 GMT

பைக்னர் ,

வட இந்தியாவில் சமீப காலமாக அடிக்கடி லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த 22 ஆம் தேதி இரவு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் அதிர்வுக்ள் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களிலும் உணரப்பட்டது. அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலையில், ராஜஸ்தானின் பைக்னர் மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. முன்னதாக வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. வடகிழக்கு மற்றும் வட இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்