அசாம் மாநிலத்தில் லேசான நில நடுக்கம் : ரிக்டர் அளவில் 4 ஆக பதிவு
அசாம் மாநிலத்தில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவானது.
கவுகாத்தி,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. அசாமில் உள்ள நகான் பகுதியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் மையமாக கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 4.20 மணியளவில் உணரப்பட்ட இந்த நில நடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.