டெல்லியில் தூசு இல்லா பிரசார திட்டம்; அரசு சார்பில் தொடக்கம்

டெல்லியில் தூசு இல்லா பிரசார திட்டம் ஒன்றை அரசு இன்று தொடங்கி உள்ளது.

Update: 2023-05-08 17:26 GMT

புதுடெல்லி,

டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான அரசு, தூசு இல்லா பிரசார திட்டம் ஒன்றை அரசு இன்று தொடங்கி உள்ளது. இதன்படி, டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரி இன்று அனைத்து துறையினருடனும் மறுஆய்வு கூட்டம் ஒன்றை தலைமையேற்று நடத்தினார்.

அதில், முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகளால், டெல்லியில் காற்று மாசுபாடு சீராக குறைந்து வருகிறது. 2016 முதல் 2023 ஆண்டு வரையில் டெல்லியில் 30 சதவீதம் வரை காற்று மாசுபாடு வீழ்ச்சி கண்டு உள்ளது.

கோடை காலத்தில் தூசு, மலை போன்று குவியும் குப்பைகள் மற்றும் காட்டுத்தீ ஆகியவற்றால் காற்று மாசு ஏற்படுகிறது. அதனால், மே 8 (இன்று) முதல் ஒரு மாத காலத்திற்கு தூசு ஒழிப்பு பிரசார திட்டம் அரசால் தொடங்கப்பட உள்ளது. இது வருகிற ஜூன் 8-ந்தேதி வரை அமல்படுத்தப்படும்.

இதற்காக 629 அதிகாரிகள் அடங்கிய 234 ரோந்து குழுக்களும், இரவில் 433 அதிகாரிகள் அடங்கிய 165 ரோந்து குழுக்களும் டெல்லி முழுவதும் செயல்படும் என கூறியுள்ளார். புகை ஒழிப்பு கருவிகள் கட்டுமான பணியின்போது 5 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் கொண்ட இடங்களில் இனி பயன்படுத்தப்படும் உள்ளிட்ட பல விசயங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த தூசுகள் மக்களின் ஆரோக்கியத்திற்கு அதிக தீங்கு விளைவிக்க கூடியவை. அதனால், அதற்காக உருவாக்கப்பட்ட வலைதளத்தில் அனைத்து கட்டுமான ஸ்தலங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்