தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க வேண்டாம்: கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை

தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க வேண்டாம் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு, பசவராஜ் பொம்மை கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2023-08-14 12:43 GMT

பெங்களூரு,

தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க வேண்டாம் என்று கர்நாடக முதல் மந்திரி சித்தராமையாவுக்கு பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான பசவராஜ் பொம்மை கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர், "தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை நிறுத்த வேண்டும்.

தமிழகத்தில் நெற்பயிருக்கு 32 டிஎம்சி தண்ணீர் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் 60 டிஎம்சி தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கர்நாடக விவசாயிகளுக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது. ஏற்கெனவே தமிழகத்திற்கு கூடுதல் நீர் வழங்கியிருக்கிறோம். அதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை நிறுத்த வேண்டும்.

கர்நாடகாவின் 4 அணைகளில் இருக்கும் தண்ணீர் பெங்களூரு மற்றும் காவிரி படுகையில் உள்ள கிராமங்களின் குடிநீருக்கே போதுமானதாக இல்லை. காவிரி படுகையில் உள்ள காரிஃப் பயிர்கள் நைட்ரஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்படும். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதால் கர்நாடக மக்கள் மற்றும் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாவர்.

எனவே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்