டிப்ளமோ மாணவர் தடாகத்தில் மூழ்கி பலி

ஹப்பி நீர் வீழ்ச்சியில் குளிக்க சென்ற டிப்ளமோ மாணவர்கள் தடாகத்தில் மூழ்கி பலியானார்.

Update: 2023-01-05 18:45 GMT

சிவமொக்கா:-

சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகாவில் ஹப்பி நீர்வீழ்ச்சி உள்ளது. வனப்பகுதியில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அருகில் உள்ள தடாக நீரில் மூழ்கி சிலர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் தீர்த்தஹள்ளியை சேர்ந்தவர் ரவி. அவரது மகன் ரிஷப் ெஷட்டி (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள டிப்ளமோ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பர்களான சமந்த், அபிஷேக் ஆகியோருடன் சம்பவத்தன்று ஹப்பி நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றனர். நீர்வீழ்ச்சி தடாகத்தில் அவர்கள் 3 பேரும் குளித்தனர். அப்போது திடீரென அவர்கள் நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதற்கிடையே அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து 2 பேரை மீட்டனர். எனினும், ரிஷப் ஷெட்டி, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து உடனடியாக ஒசநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசாதர், மாணவர் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்