மைசூரு மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை மந்திரி திடீர் ஆய்வு

மைசூரு மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் திடீரென ஆய்வு செய்தார்.

Update: 2023-06-27 21:12 GMT

மைசூரு:

மைசூரு மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் திடீரென ஆய்வு செய்தார்.

மந்திரி ஆய்வு

மைசூரு டவுன் மேட்டுகள்ளி பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு புதியதாக மாவட்ட அரசு ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டது. அங்கு கொரோனா சமயத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில், மைசூரு மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் நேற்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். மேலும் அவர்களிடம் ஆஸ்பத்திரியில் உள்ள குறைகளை மந்திரி தினேஷ் குண்டுராவ் கேட்டறிந்தார்.

கர்ப்பிணிகளை கட்டாயப்படுத்தி அறுவை சிகிச்சை செய்ய கூடாது. ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை காத்திருக்க வைக்க கூடாது. மேலும் நோயாளிகளிடம் டாக்டர், ஊழியர்கள் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என மந்திரி தினேஷ் குண்டுராவ் டாக்டர்களிடம் தெரிவித்தார்.

கோரிக்கை மனு

மருத்துவ அதிகாரி அமர்நாத், ஆஸ்பத்திரியில் 180 ஆக்சிஜன் படுக்கைகள், 80 ஆக்சிஜன் இல்லாத படுக்கைகள் உள்ளன. மேலும் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறை உள்ளது என சுகாதாரத்துறை மந்திரியிடம் கூறினார். அதற்கு மந்திரி காலி பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, எம்.எல்.ஏ.க்கள் ஹரிஷ்கவுடா, அணில் சிக்கமாது, மாவட்ட சுகாதார அதிகாரி மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரி பிரசாத், உள்பட பலர் இருந்தனர்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறிய ஆஷா ஊழியர்களுக்கு மாதந்தோறும் கவுரவ தொகை ரூ.8 ஆயிரத்தை உடனே வழங்க வேண்டும் என சி.ஐ.டி.யு. சார்பில் மந்திரி தினேஷ் குண்டுராவிடம் மனு அளித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்