திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசன கலாசாரத்தை குறைக்க வேண்டும்: சந்திரபாபு நாயுடு

பிரசாதங்களின் தரத்தை தொடர்ந்து சோதனை செய்ய தேவஸ்தானத்திற்கு சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2024-10-05 08:52 GMT

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதையொட்டி நேற்று இரவு ஆந்திர மாநில அரசு சார்பில் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு 2 நாள் பயணமாக நேற்று திருப்பதிக்கு வந்தார்.

இந்நிலையில், திருப்பதி பத்மாவதி விருத்தினர் மாளிகையில் தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, பிரசாதங்களின் தரத்தை தொடர்ந்து சோதனை செய்ய தேவஸ்தானத்திற்கு அவர் அறிவுறுத்தினார். மேலும் திருப்பதி கோவிலில் விஐபி தரிசன கலாசாரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார். திருமலையில் கோவிந்தா நாமம் என்பதை தவிர வேறு எந்த வார்த்தையும் கேட்கக்கூடாது என்று சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்தார். அதேபோல திருமலையில் வனப்பரப்பை 72லிருந்து 80 சதவீதமாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்