துணை முதல்-மந்திரியாகிறார் தேவேந்திர பட்னாவிஸ்?

மராட்டிய மாநில துணை முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-06-30 13:47 GMT

மும்பை,

சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியிலிருந்து நேற்று ராஜினாமா செய்த நிலையில் ஆட்சி அமைக்க தேவேந்திர பட்னாவிசும் ஏக்நாத் ஷிண்டேவும் ஆளுநர் கோஷ்யாரியிடம் உரிமை கோரினர். ஆட்சி அமைக்க உரிமை கோரி வந்த தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டேவுக்கு இனிப்பு ஊட்டினார் ஆளுநர் கோஷியாரி. தங்களுக்கு தான் பெரும்பான்மை பலம் இருப்பதாக இருவரும் ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.

பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக ஏக்நாத் ஷிண்டேதான் மராட்டிய முதல்-மந்திரியாக பதவியேற்பார் என தேவேந்திர பட்னாவிஸே அறிவித்தார். இன்று இரவு 7.30க்கு ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவியேற்பார் என்றும் அவர் அறிவித்தார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு பாரதிய ஜனதா ஆதரவு தரும் என்றும் ஷிண்டே அமைச்சரவையில் பாஜக இடம் பெறும் என்றும் ஆனால் பட்னாவிஸ் அமைச்சரவையில் இடம் பெறமாட்டார் என்றும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், மராட்டிய மாநில துணை முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் இணைய பட்னாவிஸ் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சரவையில் சேர பட்னாவிஸ் ஒப்புக்கொண்டதாக அமித்ஷா, ஜே.பி.நட்டா அகியோர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்