காஷ்மீரில் நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட மிக்-29 ரக போர் விமானங்கள் நிலைநிறுத்தம்
நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதி உள்ளிட்ட நவீன வசதிகள் மிக்-29 ரக போர் விமானத்தில் உள்ளன.
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் பழமையான மிக்-21 ரக போர் விமானங்களுக்கு பதிலாக மிக்-29 ரக போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. சீனா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இருமுனை தாக்குதல்கள் நிகழ்ந்தால், அதை திறம்பட எதிர்கொள்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரவில் இயக்கும் வசதி, நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதி உள்ளிட்ட நவீன வசதிகள் மிக்-29 ரக போர் விமானத்தில் உள்ளன. நீண்ட தொலைவில் வான் மற்றும் நிலத்தில் உள்ள இலக்குகளை வானில் இருந்தபடியே குறிவைத்து தாக்கும் வசதி மிக்-29 போர் விமானத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.