டெல்லி சிறைத்துறை டி.ஜி.பி. இடமாற்றம்

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், ரூ.200 கோடி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-11-04 17:21 GMT

புதுடெல்லி, 

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், ரூ.200 கோடி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு எழுதிய கடிதத்தில், சிறையில் பாதுகாப்பாக இருப்பதற்காக, 2019-ம் ஆண்டு, தன்னிடம் டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின் ரூ.10 கோடியும், சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் கோயல் ரூ.12 கோடியே 50 லட்சமும் பறித்துக்கொண்டதாக கூறியிருந்தார்.

இந்தநிலையில், சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் கோயல், திகார் சிறையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேல் உத்தரவுக்காக, போலீஸ் தலைமையகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய சிறைத்துறை டி.ஜி.பி.யாக சஞ்சய் பேனிவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்