நீட் மறுதேர்வில் பங்கேற்க அனுமதி கோரிய 3 மாணவர்களின் மனு தள்ளுபடி

வருகிற 23-ம்தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.

Update: 2024-06-20 19:30 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வில் நேரம் இழப்பு காரணமாக 1,500-க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு வலுத்ததால், அந்த மதிப்பெண் ரத்து செய்யப்படுவதாகவும், அந்த மாணவர்களுக்கு வருகிற 23-ம்தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் நீட் தேர்வு எழுதிய டெல்லியை சேர்ந்த 3 மாணவர்கள் இந்த மறுதேர்வு எழுத அனுமதிக்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். கடந்த மே 5-ம்தேதி நடந்த தேர்வின்போது முதலில் கொடுத்த வினாத்தாள் மற்றும் விடைத்தாளை தேர்வின் பாதியிலேயே பெற்றுக்கொண்டு மாற்று வினா மற்றும் விடைத்தாள்களை வழங்கியதாகவும், இதனால் ஏற்பட்ட நேரம் இழப்புக்காக தங்களுக்கு கூடுதல் நேரமோ, கருணை மதிப்பெண்ணோ வழங்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால் மேற்படி மாணவர்கள் தேர்வு எழுதிய மையத்தில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை கோர்ட்டில் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து அந்த மாணவர்களின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி மனோஜ் ஜெயின் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்