54 பயணிகள் இல்லாமல் புறப்பட்டுச் சென்ற கோ ஃபர்ஸ்ட் விமானம் - பெங்களூரு விமான நிலையத்தில் குழப்பம்
பெங்களூருவில் இருந்து டெல்லி செல்லும் கோ ஃபர்ஸ்ட் விமானம் 54 பயணிகளை விட்டுவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில் இருந்து டெல்லி செல்லும் கோ ஃபர்ஸ்ட் விமானம் 54 பயணிகளை விட்டுவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் கோ ஃபர்ஸ்ட் ஜி8 116 விமானம் திங்கள்கிழமை காலை 6:30 மணிக்கு புறப்பட்டது. ஆனால் இந்த விமானம் போர்டிங் பாஸ்களுடன் காத்திருந்த 54 பயணிகள் இல்லாமல் அவர்களுடைய லக்கேஜ்களுடன் புறப்பட்டு சென்றது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் அங்கு பெரும் குழப்பம் நிலவியது. இதுகுறித்து பயணிகள் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
பெங்களூரு விமான நிலையத்தில் குழப்பம் நிலவுவதாகக் கூறி டுவிட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்த ஒருவர், "பெங்களூரு-டெல்லி செல்லும் கோ ஃபர்ஸ்ட் ஜி8 116 விமானம் 54 பயணிகளை விமான நிலையத்தில் விட்டுவிட்டு லக்கேஜ்களுடன் புறப்பட்டு சென்றது. பயணிகள் சிரமப்படுகின்றனர்" என்று தெரிவித்திருந்தார்.
அந்த டுவிட்டுகளுக்கு விமான நிறுவனம் பதிலளித்து, சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டது.