டெல்லி புறப்பட்ட விமானம் ஸ்வீடனில் அவசர தரையிறக்கம்...!

நியூயார்க்கில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஸ்வீடனில் ஸ்டாக்ஹோமில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.;

Update:2023-02-22 10:36 IST

லண்டன்,

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இருந்து 300 பயணிகளுடன் டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம்தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஸ்வீடனில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.

ஸ்டாக்ஹோம் விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு ஏர் இந்தியா விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானத்தின் என் ஜினில் ஆயில் கசிவு ஏற்பட்டதாக விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்