தேஜஸ்வி யாதவ் மீதான அவதூறு வழக்கு ரத்து - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தனது கருத்துக்களை திரும்பப் பெறுவதாக தேஜஸ்வி யாதவ் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.;
புதுடெல்லி,
பீகார் மாநில முன்னாள் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், செய்தியாளர்கள் சந்திப்பின்போது, 'குஜராத்திகள் ஏமாற்றுக்காரர்கள், அவர்களது ஏமாற்று வேலைகள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிடும்' என்று பேசியதாக அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, தனது கருத்துக்களை திரும்பப் பெறுவதாக தேஜஸ்வி யாதவ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, குஜராத்திகள் ஏமாற்றுக்காரர்கள் என பேசியதாக தேஜஸ்வி யாதவுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.