ஓமன் சிறையில் உள்ள கைதியிடம் விசாரிக்க முடிவு

பெங்களூருவில் இலங்கையை சேர்ந்தவர்கள் கைதான விவகாரத்தில் ஓமன் நாட்டு சிறையில் உள்ள கைதியிடம் விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-08-26 18:45 GMT

பெங்களூரு:-

இலங்கையை சேர்ந்தவர்கள்

பெங்களூருவில் இலங்கையை சேர்ந்த வாலிபர்கள் பதுங்கி இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் போலீசார் நகரின் பல பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது எலகங்கா அருகே ஜக்கூர் லே-அவுட் பகுதியில் பதுங்கி இருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் இலங்கையில் நடந்த கொலை வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகள் என்பதும் தெரிந்தது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர்கள் பெங்களூருவில் சட்டவிரோதமாக புகுந்து வசித்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அப்போது விசாரணையில் ஜலால் என்கிற முகமது சித்திக் என்பவர் பெங்களூருவில் அவர்களை தங்க வைப்பதற்கும், அவர்களுக்கு நிதி உதவி அளிக்கவும் ஏற்பாடுகள் செய்து வந்துள்ளார். அதாவது பெங்களூரு எலகங்கா பகுதியில் தொழிற்சாலை ஒன்றை நிறுவி, அதன் மூலம் வரும் பணத்தை இலங்கையை சேர்ந்தவர்களுக்கு கொடுத்து வந்துள்ளார்.

ஓமன் சிறையில்...

இதையடுத்து போலி பாஸ்போர்ட்டு மூலம் ஜலால், ஓமனுக்கு தப்பி சென்றதும், தற்போது ஓமன் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இந்த நிலையில் பெங்களூருவில் இலங்கையை சேர்ந்தவர்கள் கைதான விவகாரம் குறித்து, ஓமன் சிறையில் உள்ள ஜலாலிடம் விசாரணை நடத்துவதற்கு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக ஓமன் நாட்டு போலீசாருடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்