மடாதிபதி உள்பட 2 பேருக்கு கொலை மிரட்டல் ; டாக்டர் கைது

ஒலல்கெரேயில் மடாதிபதி உள்பட 2 பேருக்கு கொலை மிரட்டல் விடுத்த டாக்டர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-18 15:43 GMT

சிக்கமகளூரு;

சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே ஜோகி மட்டா மடாதிபதியாக இருப்பவர் சித்தராமேஸ்வரர். இவருக்கும், பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவருக்கும் மர்மநபர் கொலை மிரட்டல் விடுத்ததாக ஒலல்கெரே போலீசில், மடாதிபதி புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடையதாக சிக்பள்ளாப்பூரை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் முத்தேனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ருத்ரசாமி என்பதும், அவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், அவர் ஒட்டா போவி சமூதாயத்தை சேர்ந்தவர் என்பதும், அரசியல் பிரச்சினை காரணமாக அவர் பா.ஜனதா எம்.எல்.ஏ. மற்றும் மடாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.

அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவருடன் தொடர்புடைய 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்