இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் - மல்லிகார்ஜுன கார்கே

மல்லிகார்ஜுன கார்கே வீட்டில், ‘இந்தியா’ கூட்டணியின் 17 கட்சிகளைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினர்.

Update: 2023-12-06 23:33 GMT

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில், 'இந்தியா' கூட்டணியின் 17 கட்சிகளைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினர். இந்த கூட்டத்துக்கு கார்கேயும், ராகுல் காந்தியும் தலைமை வகித்தனர். இதுதொடர்பாக கார்கே தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளின் மக்களவை, மாநிலங்களவை தலைவர்களின் சந்திப்பு எனது இல்லத்தில் நடைபெற்றது.

இதில், மத்திய அரசை பொறுப்பேற்க வைக்கும் வகையில் நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் வரும் நாட்களில் மக்கள் பிரச்சினைகளை எழுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நடக்கும் தேதி விரைவில் முடிவு செய்து அறிவிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்