'அவசர நிலையை துணிச்சலுடன் எதிர்த்தவர்களை தலைவணங்குகிறேன்' - பிரதமர் மோடி
அவசர நிலையை துணிச்சலுடன் எதிர்த்தவர்களை தலைவணங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாட்டின் பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது, 1975-ம் ஆண்டு, ஜூன் மாதம் 25-ந் தேதி அவசர நிலையை அமல்படுத்தினார். இது 1977-ம் ஆண்டு மார்ச் 21-ந் தேதி முடிவுக்கு வந்தது. அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதின் 48-வது ஆண்டு நினைவு தினம் நேற்று ஆகும். இதையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.
அதில் அவர், " அவசர நிலையை எதிர்த்து, ஜனநாயக உணர்வினை வலுப்படுத்த பாடுபட்ட துணிச்சலான மக்களை நான் தலைவணங்குகிறேன். அவசர நிலையின் இருண்ட காலம், நமது வரலாற்றில் மறக்க முடியாத காலம். நமது அரசியல் சாசனம் கொண்டாடும் மதிப்புகளுக்கு அது முற்றிலும் எதிரானது" என குறிப்பிட்டுள்ளார்.