தட்சிண கன்னடா மாவட்டத்தில் தோல் நோய் பரவாமல் தடுக்க கால்நடைகளுக்கு தடுப்பூசி

தட்சிண கன்னடா மாவட்டத்தில் தோல் நோய் பரவாமல் தடுக்க கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

Update: 2022-10-17 19:00 GMT

மங்களூரு;


கால்நடைத்துறை துணை இயக்குனர் அருண்குமார் கூறியதாவது:-

தட்சிண கன்னடா மாவட்டத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் நோய் பரவாமல் இருக்க 20 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது. பெங்களூருவில் இருந்து தடுப்பூசிகள் இன்று(நேற்று) வருகிறது. நாளை(இன்று) முதல் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.

முதற்கட்டமாக பண்ட்வால் தாலுகாவில் பிலியூர் மற்றும் அதன் 5 கிலோமீட்டர் சுற்றளவு பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும். கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள தோல் நோய் தொற்று நோய் அல்ல. அதேநேரத்தில் தோல் நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பால் அருந்துவதால் மனிதர்களுக்கு தோல் நோய் தாக்காது.

அதனால் பொதுமக்கள் பயப்பட வேண்டாம். தட்சிண கன்னடா மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தோல் நோய் இருப்பது உறுதி செய்யப்படவில்லை. ஆனால் பிலியூரில் தோல் நோயால் பாதிக்கப்பட்டு மாடு ஒன்று இறந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த மாட்டின் உடற்கூறு பரிசோதனை பெங்களூருவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்