கோர்ட்டில் இருந்து வாரண்டு பெறாமல் மதுபான விடுதிகளில் கலால்துறையினர் சோதனை நடத்த கூடாது; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

கோர்ட்டில் இருந்து வாரண்டு பெறாமல் மதுபான விடுதிகளில் கலால்துறையினர் சோதனை நடத்த கூடாது என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-12-29 18:45 GMT

பெங்களூரு:

மதுபான விடுதியில் சோதனை

கொப்பல் மாவட்டத்தில் மதுபான விடுதி நடத்தி வருபவர் சுதர்சன் கவுடா. இவரது மதுபான விடுதி சட்டவிரோதமாக செயல்படுவதாக கூறி சமீபத்தில் கலால்துறை போலீசார் சோதனை நடத்தி இருந்தார்கள். சுதர்சன் கவுடாவின் மதுபான விடுதியில் சோதனை நடத்துவதற்கு, கோர்ட்டில் இருந்து போலீசார் எந்த ஒரு வாரண்டும் பெறாமல் இருந்திருந்தனர்.

இதையடுத்து, வாரண்டு இல்லாமல் தனது மதுபான விடுதியில் சோதனை நடத்திய கலால்துறை இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக ஐகோர்ட்டில் சுதர்சன் கவுடா வழக்கு தொடர்ந்து இருந்தார்.

வாரண்டு இல்லாமல்...

இந்த வழக்கு விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி ஹேமந்த் சந்தனகவுடர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், மதுக்கடை, மதுபான விடுதிகளில் சோதனை நடத்துவதற்கு கலால்துறையினர் முறையான வாரண்டு பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது. அது தற்போது மீறப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து, மதுக்கடைகள், மதுபான விடுதிகள் விதிமுறைகளை மீறி செயல்படுவது தெரியவந்தால், முறையான வாரண்டு பெற்று தான் கலால்துறையினர் சோதனை நடத்த வேண்டும். வாரண்டு இல்லாமல் சோதனை நடத்த அனுமதி இல்லை. வாரண்டு இருந்தால், சோதனை நடத்தி ஆவணங்களை பரிசீலிக்கலாம். விதிமுறைகள் மீறப்பட்டு இருந்தால், அங்கிருக்கும் பொருட்களை ஜப்தி கூட செய்யலாம் என்று நீதிபதி ஹேமந்த் சந்தனகவுடர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்