டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 4.11 சதவிகிதமாக உயர்வு

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 795- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update:2022-06-11 21:38 IST

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 795- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 4.11 சதவிகிதமாக உள்ளது. டெல்லியில் கடந்த மே 13 ஆம் தேதி 899- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.அப்போது தொற்று பாதிப்பு விகிதம் 3.34 சதவிகிதமாக இருந்தது.

ஏறத்தாழ ஒருமாதத்திற்கு பிறகு தற்போது தொற்று பாதிப்பு விகிதம் 4.11 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. டெல்லியில் நேற்றும் நேற்று முன் தினமும் 600- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று தொற்று பாதிப்பு 795 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. 

Tags:    

மேலும் செய்திகள்