கோரமண்டல் ரெயில் விபத்து: அவசர கால கட்டுப்பாடு அறை எண் அறிவிப்பு
ரெயில்கள் மோதிய விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.
ஒடிசா,
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசா அருகே சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குளானது. இந்த விபத்தில் 7 பெட்டிகள் தடம் புரண்டுள்ளது.
இந்த விபத்தால் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த பகுதியில் பேரிடர் மீட்பு பணியினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதி என்பதாலும், இரவு நேரம் என்பதாலும், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அவசர கால கட்டுப்பாட்டு எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. ரெயிலில் பயணித்தோர் விபரம் அறிந்துகொள்ள அவசர கட்டுப்பாட்டு அறை பாலசோர் (ஒடிசா) +91 67822 62286 மற்றும் (சென்னை) 044-25330952, 044-25330953 & 044-52354771 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.